/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை வெட்டிய 4 பேருக்கு 'காப்பு'
/
வாலிபரை வெட்டிய 4 பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 14, 2024 12:34 AM
கோயம்பேடு, நெற்குன்றத்தில் கடந்த 11ம் தேதி, மயான கொள்ளை நடைபெற்றது.
அப்போது, நெற்குன்றம் சக்திநகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த ஹரிப்பிரியன், 32, என்பவரை, நான்கு பேர் கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
கோயம்பேடு போலீசார் விசாரித்து, இதில் தொடர்புள்ள நெற்குன்றத்தைச் சேர்ந்த சுந்தர், 19, பாலமுருகன், 20, திருவேற்காடைச் சேர்ந்த ஜெயசூர்யா, 20, ஈஸ்வர், 23, ஆகிய நான்கு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 10ம் தேதி இரவு, ஹரிப்பிரியன் தன் நண்பருடன் பைக்கில் சென்ற போது, சுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
மறுநாள், ஹரிப்பிரியன் தன் நண்பர்களுடன் சுந்தரின் வீட்டிற்குச் சென்று, சத்தம் தகராறு செய்துள்ளார்.
இந்த ஆத்திரத்தில், சுந்தர் தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, ஹரிப்பிரியனை கத்தியால் வெட்டியது தெரிந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

