/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 26, 2024 01:26 AM
மேடவாக்கம்:தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், ஜல்லடையன்பேட்டை தனியார் வணிக வளாகம் மற்றும் தனியார் கல்லுாரிக்கு வருவோர், மேடவாக்கம் மேம்பாலம் இறங்கு முகத்தில் உள்ள, பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இங்கிருந்து பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த நிறுத்தத்தில் தான் காத்திருக்க வேண்டும்.
காலை முதல் இரவு வரை, தினம் 3,000த்துக்கும் மேற்பட்ட பயணியர், பேருந்துக்காக இந்த இடத்தில் காத்திருக்கின்றனர். இங்கு நிழற்குடை இல்லாததால், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, இவ்விடத்தில் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என, மாணவ - மாணவியர் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

