/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 கோடி மதிப்பு கோவில் இடம் மீட்பு
/
ரூ.1 கோடி மதிப்பு கோவில் இடம் மீட்பு
ADDED : பிப் 08, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, சூளையில் அங்காளபரமேஸ்வரி மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான கட்டடம், அங்காளம்மன் தெருவில் உள்ளது.
அக்கட்டடத்தில், 614 சதுர அடி இடத்தில் வாடகைக்கு இருந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமீனா வாயிலாக, ஆக்கிரமிப்பு அகற்றி கோவில் செயல் அலுவலர் சண்முகம் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்ட, அம்மன் கோவில் இடத்தின் தற்போதைய மதிப்பு 1 கோடி ரூபாய்.

