/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயிற்சி மாணவி பலாத்காரம்: 'பிசியோதெரபி' டாக்டர் கைது
/
பயிற்சி மாணவி பலாத்காரம்: 'பிசியோதெரபி' டாக்டர் கைது
பயிற்சி மாணவி பலாத்காரம்: 'பிசியோதெரபி' டாக்டர் கைது
பயிற்சி மாணவி பலாத்காரம்: 'பிசியோதெரபி' டாக்டர் கைது
ADDED : டிச 22, 2025 04:59 AM

கொளத்துார்: பயிற்சி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, 'பிசியோதெரபி' டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண் ஒருவர், கொளத்துார் மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் அளித்த புகார்:
நான் தனியார் மருத்துவ கல்லுாரியில், 'பிசியோதெரபி' படித்து வருகிறேன். பகுதி நேரமாக, பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறேன்.
மருத்துவமனை உரிமையாளரான பெரவள்ளூரைச் சேர்ந்த 'பிசியோதெரபி' டாக்டர் கார்த்திக், 27, என்பவர், கொளத்துாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு, பிசியோதெரபி செய்ய வேண்டும் என, நேற்று முன்தினம் என்னை அழைத்துச் சென்றார். அங்கு, அவர் தந்த குளிர்பானத்தை குடித்ததும் நான் மயங்கினேன். விழித்து பார்த்தபோது, கார்த்திக் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், கார்த்திக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

