/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் மயங்கிய பயணி வர்ம முறை சிகிச்சையால் நலம்
/
விமானத்தில் மயங்கிய பயணி வர்ம முறை சிகிச்சையால் நலம்
விமானத்தில் மயங்கிய பயணி வர்ம முறை சிகிச்சையால் நலம்
விமானத்தில் மயங்கிய பயணி வர்ம முறை சிகிச்சையால் நலம்
ADDED : நவ 27, 2025 03:17 AM
சென்னை: விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு, சித்த மருத்துவர்கள் இருவர், வர்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனர்.
டில்லியிலிருந்து திருச்சிக்கு, 22ம் தேதி சென்று கொண்டிருந்த, 'கோ இண்டிகோ' விமானத்தில், இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். பயணத்தின் இடையே கழிப்பறைக்கு செல்ல முற்பட்டபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, விமான பணிப்பெண்கள், அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனர். அது பலனளிக்காததால், விமானத்தில் மருத்துவர்கள் எவரேனும் உள்ளனரா என, உதவிக்கு அழைத்துள்ளனர்.
அதன்படி, எம்.டி., சித்தா படிப்பை நிறைவு செய்த இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவ அறிவியல் பட்டம் பெற்ற கவுதம் ஆகிய இரு மருத்துவர்கள், அந்த விமானத்தில் இருந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரும், கவுளி அடங்கல் மற்றும் செவிக்குற்றி புள்ளி ஆகிய வர்ம சிகிச்சைகளை, அப்பெண்ணுக்கு அளித்துள்ளனர். அதன் பயனாக, அவர் மயக்கம் தெளிந்து, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
மருத்துவர்களின் இச்செயலுக்கு, விமானத்தில் இருந்தவர்களும், விமான சேவை நிறுவனத்தினரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

