/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மே 2க்குள் அறிக்கை தர உத்தரவு
/
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மே 2க்குள் அறிக்கை தர உத்தரவு
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மே 2க்குள் அறிக்கை தர உத்தரவு
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மே 2க்குள் அறிக்கை தர உத்தரவு
ADDED : மார் 12, 2024 12:23 AM
சென்னை, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள், கடந்த நவம்பர் இறுதியில் செத்து மிதந்தன.
இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய் படலமாக மாறியதே காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியாயின.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர், ஹிந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மீன்வளத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம், கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழந்தன. அதில் ஒரு வகை குறிப்பிட்ட மீன்கள் அதிகம் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது' என, கூறியுள்ளார்.
தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்ததற்கு கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் விளக்கேற்ற பயன்படுத்திய எண்ணெய் குளத்தில் அதிக அளவு கலந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் அது உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்.
கோவில்கள், கோவில் குளங்களுக்கு பொறுப்பான ஹிந்து சமய அறநிலையத்துறையுடன் கலந்தாலோசித்து, பக்தர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில், மீன்களை பாதுகாக்க தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் மே 2க்குள், மீன்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

