ADDED : மார் 12, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலவாக்கம், இ.சி.ஆர்., பாலவாக்கம், நாயுடு தோட்டம் பகுதியில், புதிதாக ஒரு 'டாஸ்மாக்' கடை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அருகில், பள்ளி, கோவில், மசூதி இருப்பதுடன், குடியிருப்பு பகுதியானதால், அங்கு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு உள்ளது.
இந்நிலையில் கடை திறக்கும் இடத்தில், அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, கடை திறந்தால் போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் கூறினர். கடை திறப்பை, அதிகாரிகள் தள்ளிவைத்தனர்.

