/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெங்காய வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.25 ஆக குறைவு
/
வெங்காய வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.25 ஆக குறைவு
ADDED : டிச 24, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெரிய வெங்காயம் உற்பத்தி குறைந்ததால், மஹாராஷ்டிராவில் இருந்து கோயம்பேடிற்கு வெங்காயம் வரத்து வந்தது. இதனால், ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தற்போது, ஆந்திரா, கர்நாடகாவில் வெங்காய அறுவடை துவங்கியுள்ளது. அங்கிருந்து புதிய வெங்காயம் விற்பனைக்கு வருவதால், கோயம்பேடு சந்தையில் கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

