/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து: தமிழக அணி சாம்பியன்
/
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து: தமிழக அணி சாம்பியன்
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து: தமிழக அணி சாம்பியன்
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து: தமிழக அணி சாம்பியன்
ADDED : நவ 12, 2025 10:49 PM

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய சப் - ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழக அணி 2 - 1 என்ற கோல் கணக்கில், தெலுங்கானா அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில் சப் - ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தின் நராயண்பூரில் உள்ள ஆர்.கே.எம்., ஆஷ்ரம் மைதானத்தில் நடந்தது.
தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான் உட்பட 15 மாநில அணிகள், நான்கு பிரிவாக பங்கேற்றன. இதன் இறுதி போட்டி, நேற்று நடந்தது. இதில் தமிழக அணி, தெலுங்கானா அணியுடன் மோதியது.
போட்டியின் முதல் பாதியில் தமிழக அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில், தடுப்பு திசையில் அசத்திய தமிழக அணி, எதிர் அணிக்கு கோலுக்கான வாய்ப்பை கொடுக்கவில்லை. எனினும், எதிரணி ஒரு கோல் அடித்தது.
முடிவில் தமிழக அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தமிழக வீரர் சவுவிக் ஹால்டர் 13வது நிமிடம், அபிட்நேகோ 38 நிமிடத்தில் கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினர்.

