sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முருகப்பா கோப்பை ஹாக்கி: மீண்டும் முத்திரை பதித்தது ரயில்வே

/

முருகப்பா கோப்பை ஹாக்கி: மீண்டும் முத்திரை பதித்தது ரயில்வே

முருகப்பா கோப்பை ஹாக்கி: மீண்டும் முத்திரை பதித்தது ரயில்வே

முருகப்பா கோப்பை ஹாக்கி: மீண்டும் முத்திரை பதித்தது ரயில்வே


ADDED : அக் 02, 2024 12:13 AM

Google News

ADDED : அக் 02, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் இயங்கி வரும் 'முருகப்பா குழுமம்' சார்பில், தேசிய அளவிலான ஹாக்கி போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு 95வது தொடர், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், செப்., 19ம் தேதி துவங்கியது.

இதில், இந்தியன் ரயில்வே, ராணுவம், பி.பி.சி.எல்., மஹாராஷ்டிரா, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கர்நாடகா, ஐ.ஓ.சி.எல்., - என்.சி.ஓ.இ., சென்ட்ரல் செக்ரட்ரியேட், ஒடிசா ஆகிய, 10 அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே அணியை எதிர்த்து ஐ.ஓ.சி., எனும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி களமிறங்கியது.

போட்டியின் துவக்கம் முதலே, பந்து ரயில்வே அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில், ரயில்வே அணியின் குர்சாஹிப்ஜித் சிங் 'பெனால்டி கார்னர்' மூலம் ஒரு கோல் அடிக்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் சிம்ரன்ஜோத் சிங் ஒரு பீல்டு கோல் அடித்து, முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

அடுத்து 18வது நிமிடத்தில், யுவராஜ் ஒரு கோல் அடிக்க, ரயில்வே அணி வலுவான முன்னிலை பெற்றது. எதிர்த்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட ஐ.ஓ.சி., அணியினர் 23, 29வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் 3 - -2 என விறுவிறுப்பாக மாறியது.

இடைவேளைக்கு பின், ரயில்வே அணியினர் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்த, அடுத்தடுத்து இரு கோல்கள் கிடைத்தன. பதிலுக்கு ஐ.ஓ.சி., அணி ஒரு கோல் அடித்தது.

இறுதியில், ரயில்வே அணி 5- - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக ரயில்வே அணியின் பர்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒட்டுமொத்த போட்டியின் சிறந்த முன்கள ஆட்டக்காரராக ரயில்வே அணியின் யுவராஜ், தடுப்பாட்டக்காரராக ஜோகிந்தர் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us