/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேயர், கவுன்சிலர் நிதியில் பல்நோக்கு மைய கட்டடம்
/
மேயர், கவுன்சிலர் நிதியில் பல்நோக்கு மைய கட்டடம்
ADDED : ஜூலை 29, 2025 12:38 AM
நீலாங்கரை, நீலாங்கரையில், மேயர் மற்றும் கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாயில், பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட உள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டு, நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் கடற்கரை சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.
இதில், ஒரு கோடி ரூபாயில், பல்நோக்கு மைய கட்டடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, மேயர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மற்றும் 192வது வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் என, ஒரு கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

