ADDED : ஆக 12, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், மேற்கு தாம்பரம், காமராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜியர், 55. அதே இடத்தில், மொத்தமாக எண்ணெய் பாக்கெட் வாங்கி, பாக்கெட்டில் அடைத்து, சில்லறையாக வினியோகம் செய்து வருகிறார்.
இவரது கடையில், தென்காசி, பசும்பொன் நகரை சேர்ந்த காளிராஜ், 35, என்பவர் பணிபுரிந்து வந்தார். காளிராஜ், அடிக்கடி போதையில் வந்து பிரச்னை செய்ததால், வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ், நேற்று முன்தினம் இரவு, போதையில் கடைக்கு சென்று பிரச்னை செய்து, அங்கிருந்த நான்கு மொபைல் போன்களை திருடி சென்றுள்ளார்.
மொபைல் போன்கள் மாயமானதால், தாம்பரம் காவல் நிலையத்தில் ராஜியர் புகார் அளித்தார். இப்புகாரின்படி, போலீசார் காளிராஜை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மொபைல் போன்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.