/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 ஆண்டு கால்வாயை சீரமைக்க சட்டசபையில் எம்.எல்.ஏ., விவாதம்
/
25 ஆண்டு கால்வாயை சீரமைக்க சட்டசபையில் எம்.எல்.ஏ., விவாதம்
25 ஆண்டு கால்வாயை சீரமைக்க சட்டசபையில் எம்.எல்.ஏ., விவாதம்
25 ஆண்டு கால்வாயை சீரமைக்க சட்டசபையில் எம்.எல்.ஏ., விவாதம்
ADDED : ஏப் 17, 2025 11:44 PM
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர் தொகுதியில் உள்ள 25 ஆண்டு கால பழைய மழைநீர் வடிகால்வாயை புதுப்பிக்க வேண்டும் என, தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சட்டசபையில் நேற்று பேசினார்.
தி.நகர், எம்.எல்.ஏ., கருணாநிதி: கோடம்பாக்கம் மண்டலம், 130வது வார்டு வடபழனி தனியார் மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி பூங்கா, எம்.எல்.ஏ., நிதியில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்த இடத்தில் கூடுதலாக, கிரிக்கெட் பயிற்சி பெற வலை தளம் மற்றும் கேரம் விளையாட்டு மையம் அமைத்து தரப்படுமா?
அமைச்சர் நேரு: வடபழனியில் உள்ள இடத்தில், எம்.எல்.ஏ., நிதி 75 லட்சம் ரூபாய் ரூபாயில் கபடி, பூ பந்து, யோகா போன்ற உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பிற வசதிகள் ஏற்படுத்தும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
கருணாநிதி: கோடம்பாக்கம் மண்டலம், 130, 132, 135, 141 ஆகிய வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் 25 ஆண்டுகளுக்கு முன் 2 அடி அகல கால்வாயாக கட்டப்பட்டுள்ளது. பழுதடைந்த இந்த கால்வாயை இடித்து புதிதாக, 3 - 4 அடி கால்வாயாக கட்டி தர வேண்டும்.
அமைச்சர் நேரு: மழைநீர் வடிகால்வாய்க்காக சென்னையில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதிகள் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. எம்.எல்.ஏ., கூறிய இடங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, புதிதாக வடிகால்வாய் அமைக்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.

