/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' டிவி, லேப்டாப் ' திருடிய நபர் சிக்கினார்
/
' டிவி, லேப்டாப் ' திருடிய நபர் சிக்கினார்
ADDED : அக் 27, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர்: கீழ்ப்பாக்கம், வாசுதேவன் தெருவைச் சேர்ந்த ரவிகுமார், 55. இவர், கோடம்பாக்கம் வாத்தியார் தோட்ட பகுதியில், வங்கியில் இருந்து கடன் பெற்று தரும் நிறுவனம் நடத்துகிறார்.
அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'டிவி, லேப்டாப்' மற்றும் ஐந்து கணினி மானிட்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, இம்மாதம் 24ம் தேதி அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 'டிவி' மற்றும் ஐந்து மானிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

