/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிலையத்தில் பேட்டரி திருடியவர் கைது
/
பஸ் நிலையத்தில் பேட்டரி திருடியவர் கைது
ADDED : மே 10, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலைய நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை, 26ம் தேதி திடீரென இயங்கவில்லை. இதை அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அறிவிப்பு பலகை இயங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த, 10 பேட்டரிகள் திருடு போனது தெரியவந்தது.
கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 53, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

