/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலிரவில் மனைவியை தாக்கியவர் கைது
/
முதலிரவில் மனைவியை தாக்கியவர் கைது
ADDED : நவ 27, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலிரவில் மனைவியை தாக்கியவர் கைது
வேப்பேரி: புரசைவாக்கம், பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா, 33, என்பவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும், இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த அகஸ்டின் ஜோஷ்வா, மனைவியை சுத்தியலால் தாக்கினார். பலத்த காயமடைந்த அப்பெண், சகோதரிக்கு மொபைல்போனில் நேற்று தகவல் தெரிவித்தார். அவர் வந்து, புதுப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். விசாரித்த வேப்பேரி போலீசார், அகஸ்டின் ஜோஷ்வாவை நேற்றிரவு கைது செய்தனர்.

