/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுயம்பு லட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
சுயம்பு லட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2025 02:49 AM

கொளத்துார்:கொளத்துார் அடுத்த லட்சுமிபுரம், தலைமைச் செயலக காலனியில் சுயம்பு லட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் நன்கொடையில், கோவில் முழுதும் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் மூலவரான சுயம்பு லட்சுமி அம்மன், கருமாரியம்மன், முருகர், விநாயகர், துர்க்கையம்மன் உள்ளிட்ட சுவாமிகள், ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன.
பின், சிவன், தக் ஷிணமூர்த்தி, வாராகி உள்ளிட்ட சுவாமிகளின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று நான்காம் கால பூஜைக்கு பின், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

