/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ப்ளு ஸ்கை' கிரிக்கெட் போட்டி ஐ.டி.க்யூ.சி.சி., அணி வெற்றி
/
'ப்ளு ஸ்கை' கிரிக்கெட் போட்டி ஐ.டி.க்யூ.சி.சி., அணி வெற்றி
'ப்ளு ஸ்கை' கிரிக்கெட் போட்டி ஐ.டி.க்யூ.சி.சி., அணி வெற்றி
'ப்ளு ஸ்கை' கிரிக்கெட் போட்டி ஐ.டி.க்யூ.சி.சி., அணி வெற்றி
ADDED : ஏப் 20, 2025 07:47 PM
சென்னை:சென்னை ப்ளு ஸ்கை அகடாமி சார்பில், 20 ஓவர் அடிப்படையில், ராகவேந்திரசுவாமி கோப்பைக்கான இந்த ஆண்டு, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள், கடந்த வாரம் துவங்கின. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். அதிக வெற்றி பெறும் முதல் நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.
நேற்று முன்தினம், சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடந்த, 'லீக்' போட்டியில், சி.எம்.ஆர்., அணியுடன், ஐ.டி.க்யூ.சி.சி., அணி மோதியது.
முதலில் களமிறங்கிய சி.எம்.ஆர்., அணி 18.3 ஓவரில் 89 ரன்களில், 'ஆல் அவுட்' ஆனது. பின், எளிய இலக்குடன் களமிறங்கிய ஐ.டி.க்யூ.சி.சி., அணி 11.5 ஓவரில், மூன்று விக்கெட் இழந்து, 95 ரன்கள் எடுத்து, ஏ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் சதிஷ்பாபு, 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து, வெற்றி வழிவகுத்தார்.