/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாய் கரையில் சாலை அமைக்க தடையின்மை சான்று உள்ளதா? மண்டல கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
/
பகிங்ஹாம் கால்வாய் கரையில் சாலை அமைக்க தடையின்மை சான்று உள்ளதா? மண்டல கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
பகிங்ஹாம் கால்வாய் கரையில் சாலை அமைக்க தடையின்மை சான்று உள்ளதா? மண்டல கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
பகிங்ஹாம் கால்வாய் கரையில் சாலை அமைக்க தடையின்மை சான்று உள்ளதா? மண்டல கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
ADDED : ஏப் 10, 2025 12:14 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மண்டல அதிகாரி ராஜசேகர் இம்மாதம் ஓய்வு பெறுவதால், அவரை கூட்டத்தில் கவுரவித்தனர்.
லியோ சுந்தரம், 198வது வார்டு பா.ஜ., கவுன்சிலர்: மூன்றரை ஆண்டுகள் ஆகியும், இன்னும் வார்டில் தெரு பலகைகள் வைக்கவில்லை.
கழிவுநீர் குழாய் அடைப்பு அதிகரிப்பதால், சுகாதார சீர்கேடும், தொற்று நோய் பரவலும் அதிகரித்து வருகிறது.
நுாலகம், தபால் நிலையம், வார்டு அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் நாசமடைவதால், இந்த அலுவலகங்களை இடம் மாற்ற வேண்டும்.
விமலா கர்ணா, 194வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்த வேண்டும்.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, அதிக நிதி ஒதுக்க வேண்டும். தெரு தொட்டிகளில் மூடி இல்லாததால், குடிநீர் சுகாதாரமற்றதாகிறது.
கோவிந்தசாமி, 193வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: துரைப்பாக்கத்தில் வடிகால்வாய் பணி முறையாக நடைபெறுவதில்லை. கழிப்பறை கட்டி தர வேண்டும்.
அஸ்வினி கர்ணா, 196வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: கண்ணகி நகர் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி, இரண்டரை ஆண்டுகளாக நடக்கிறது. இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?
மேனகா சங்கர், 197வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: மாண்டஸ் புயலால், பனையூரில் சேதமடைந்த சாலைகளை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கவில்லை.
இதனால் 9,000 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. கேட்டால் கடலோர பகுதியானதால் தடையின்மை சான்று கிடைக்கவில்லை என்கின்றனர்.
இப்போது, பகிங்ஹாம் கால்வாய் கரையில் சாலை அமைக்க, மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.
இதற்கு நீர்வளத்துறை தடையின்மை சான்று வழங்கியதா? நீர்நிலையில் சாலை அமைப்பது குறித்து எப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் எதிர்க்கட்சி என்பதால், அதிகாரிகள் எந்த தகவலும் எனக்கு தெரிவிப்பதில்லை.
முருகேசன், 200வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மாநகராட்சி வசம் இல்லாத சிறிய தெருக்களில், ஏன் குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு, 'பகிங்ஹாம் கால்வாயில் சாலை அமைப்பது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்' என, மண்டல குழு தலைவர் பதிலளித்தார்.
தொடர்ந்து, சாலை சீரமைப்பு, வடிகால் பணி, கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்ட, 142 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

