/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிழற்குடை அமைப்பதை விட மறைக்கும் செலவு அதிகம்?
/
நிழற்குடை அமைப்பதை விட மறைக்கும் செலவு அதிகம்?
ADDED : மார் 19, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில், முதல்வர் ஸ்டாலின் புகைப்படம், அரசு திட்டங்கள் மற்றும் கவுன்சிலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் விதி காரணமாக, அவற்றை, வெள்ளை காகிதம் மற்றும் பேனர் வைத்து மறைக்கும் பணி நடக்கிறது.
இதில், கவுன்சிலர்கள் பெயர் மேல்புறத்தில் எழுதப்பட்டிருப்பதால், ஜே.சி.பி., பாப்கட் போன்ற வாகனங்களின் முன்பக்கம் ஊழியர்கள் அமர்ந்தபடி, மேலே துாக்கி பேனர் ஒட்டி மறைக்கும் பணி, நேற்று நடைபெற்றது. இதனால், நிழற்குடை அமைத்த செலவை காட்டிலும், புகைப்படம், பெயர்களை மறைக்க அதிக செலவாகுமோ என, பலரும் கிண்டலடிக்கின்றனர்.

