/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாண்டில் வளைவுடன் துார்வாரும் பணி நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் தீவிரம்
/
துாண்டில் வளைவுடன் துார்வாரும் பணி நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் தீவிரம்
துாண்டில் வளைவுடன் துார்வாரும் பணி நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் தீவிரம்
துாண்டில் வளைவுடன் துார்வாரும் பணி நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் தீவிரம்
ADDED : பிப் 14, 2024 01:03 AM

மெரினா, நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் துாண்டில் வளைவு அமைக்கும் பணியோடு, துார்வாரும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கிய போது, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கடற்கரை அருகில் உள்ள திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளிலும் மழை வெள்ள பாதிப்பு, அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்தது.
இதுவரை பல புயல்கள் வந்தபோதும், சென்னையில் இந்த இடங்கள் மூழ்கியது கிடையாது. இந்த முறை மிக்ஜாம் புயலில் இந்த பகுதிகளும் மூழ்கின.
'முகத்துவாரம் பகுதி சரியாக துார் வாராததால் மழை நீரை கடல் உள் வாங்கவில்லை. மாறாக கடல் நீர் திரும்பி மழை நீருடன் கலந்ததால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டது' என, குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நேப்பியர் ஆற்றுப்பகுதியில் முகத்துவாரத்தை துார்வாரும் பணியில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், கடல் அரிப்பை தடுக்கும் வகையில், நட்சத்திர கற்கள் போட்டு துாண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக அங்கு தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக, இந்த பணிகளில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:
பருவமழைக்கு முன் முகத்துவாரம் பகுதியை துார் வாரும் பணி நடக்கிறது. ஆனால் தாமதமாக வேலையை துவங்குவதால், மழை வந்து துார்வாரும் பணி அரைகுறையாக நிறுத்தப்படுகிறது.
இதனால், கன மழையின் போது, மழைநீரை கடல் உள் வாங்குவதில்லை. மழைகாலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் வருவதற்கு முக்கிய காரணமாக இது அமைகிறது.
கூவம் ஆற்றையும் முறையாக துார் வார வேண்டும். வேலையை துரிதப்படுத்தினால் மட்டுமே, வரும் மழைக்காலத்தில் இதுபோன்ற பிரச்னை எழாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

