/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மன உளைச்சலில் கணவர் துாக்கிட்டு தற்கொலை
/
மன உளைச்சலில் கணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 02, 2024 07:34 AM
திருவொற்றியூர்: குடும்ப தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு சென்ற நிலையில், கணவர் மன உளைச்சலில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
மணலி, அவுரி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆதிஷ், 23, சென்ட்ரிங் வேலை பார்த்தார். இவர், ஓராண்டிற்கு முன், பியூலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், ஆதிஷூக்கு குடிப்பழக்கம் இருப்பதால், வீட்டில் தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி வீட்டில் இல்லாததால், தனிமையில் இருந்த ஆதிஷ்,நேற்று காலை, வீட்டின் மின்விசிறி ஊக்கில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த, மணலி போலீசார், உயிரிழந்த ஆதிஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

