/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஹோட்டல் உரிமையாளர் கைது
/
இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஹோட்டல் உரிமையாளர் கைது
இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஹோட்டல் உரிமையாளர் கைது
இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஹோட்டல் உரிமையாளர் கைது
ADDED : நவ 27, 2025 02:55 AM
சென்னை: கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், சென்னை அடுத்த படப்பையில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.
இவர், படப்பை பஜாரில் உள்ள எம்.ஆர்., ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது வழக்கம். இதனால், ஹோட்டல் உரிமையாளர் லோகநாதன், 36, மற்றும் அவரது மனைவியுடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற லோகநாதன், அவரை தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, அந்த பெண் லோகநாதன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண், புகார் அளித்ததையடுத்து, படப்பை போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.