/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடில் கலக்கும் மீன் கழிவால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம்
/
காசிமேடில் கலக்கும் மீன் கழிவால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம்
காசிமேடில் கலக்கும் மீன் கழிவால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம்
காசிமேடில் கலக்கும் மீன் கழிவால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம்
ADDED : மார் 27, 2025 11:49 PM

காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984 முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் வாயிலாக தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன.
இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இறால், மீன், கடமான் ஆகியவை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தினமும் 5 டன் முதல் 10 டன் வரை சுத்தம் செய்து, தரம் பிரித்து, பதப்படுத்தி விற்பனை எடுத்து செல்லப்படுகிறது.
காசிமேடு துறைமுக பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான இடத்தில், குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஆலைகளில் மீன் சுத்தம் செய்து, பதப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், இந்த மீன் கழிவை சுத்தகரிப்பு செய்யாமல், நேரடியாக காசிமேடு கடலில் விடுகின்றனர்.
இதனால், கடலில் கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கடல் நீர் மாறி மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மீன் கழிவை நேரடியாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

