/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு தகடு பெயர்ந்து அரசு பஸ்சில் அச்சம்
/
இரும்பு தகடு பெயர்ந்து அரசு பஸ்சில் அச்சம்
ADDED : பிப் 08, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரத்தில் இருந்து நடுவீரப்பட்டு பகுதிக்கு, தடம் எண்: 18-எச் மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயணிக்கும் இப்பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதியில், இரும்பு தகடு பெயர்ந்து, விழும் நிலையில் உள்ளது.
பேருந்து செல்லும் அதிர்வில், இரும்பு தகடு மேலும், கீழுமாக ஆடுகிறது. இந்த தகடு பெயர்ந்து விழுந்தால் பயணியர் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில், அரசு பேருந்தின் பலகை உடைந்து ஓட்டை வழியே பெண் பயணி விழுந்து காயமடைந்துள்ளார். அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, இரும்பு தகடை மாற்ற வேண்டும்.
- சா.ரங்கநாதன், தாம்பரம்.

