/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் முதல் முறையாக குதிரையேற்ற போட்டி
/
சென்னையில் முதல் முறையாக குதிரையேற்ற போட்டி
ADDED : பிப் 14, 2024 12:41 AM

சென்னை, குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக, 'சாம்பியன்ஸ் அறக்கட்டளை' சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கமிஷனரிடம் நேற்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
சென்னையில், 1780ல் குதிரைப்படையை அப்போதைய கவர்னர் வில்லியம் லாங்கன் துவக்கினார். அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 1800ம் ஆண்டு முதல் குதிரைப்படையை, சென்னை காவல் கண்காணிப்பாளர் வால்டர் கிராண்ட் காவல் துறைக்காக பயன்படுத்தினார்.
அதன்பின், 1926ம் ஆண்டு சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில், தனிப்பிரிவாக துவக்கப்பட்டது.
இந்நிலையில் குதிரைப்படை பிரிவை மேம்படுத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முதல் குதிரையேற்ற போட்டியை, வரும் 23 முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக, சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட்டிடம், அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.

