/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவலர் குடியிருப்பை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்'
/
காவலர் குடியிருப்பை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்'
காவலர் குடியிருப்பை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்'
காவலர் குடியிருப்பை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்'
ADDED : பிப் 28, 2024 12:31 AM
சென்னை, ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு வளாகத்தை, பிரபல தனியார் மருத்துவமனையினர், கட்டணமில்லாத வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், ஊழியர்களை அழைத்து வர, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவற்றை நிறுத்த மருத்துவமனை வளாகத்தில் போதிய இடம் இல்லாததால், கிரீம்ஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வந்தனர்.
இதுகுறித்து புகார் வந்ததை அடுத்து, நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தக் கூடாது என, ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது, அருகே உள்ள காவலர் குடியிருப்பில், கட்டணமில்லாமல் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரியிடம் தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

