/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்
/
போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்
ADDED : செப் 02, 2025 02:03 AM
வியாசர்பாடி:வாகன சோதனையின்போது, போக்குவரத்து போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபரால்
சலசலப்பு ஏற்பட்டது.
வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி சிக்னல் அருகே, நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக அதிவேகமாக வந்த, ஆர்15 பைக்கை மடக்கி விசாரித்தனர். அந்த பைக்கில் நம்பர் பிளேட், ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், பைக்கை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார்.
போக்குவரத்து போலீசார், கருவி மூலம் பரிசோதிக்க முயற்சித்தபோது, போதை வாலிபர் ஆபாச சைகை காண்பித்து, அங்கிருந்த பெண் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் பேசி விட்டு, 'பைக்கை நீயே வைத்துக் கொள்' என, வீரவசனம் பேசி, உடன் வந்தவருடன் திடீரென தப்பினார்.
விசாரணையில், பைக்கில் பயணித்த ஒருவர், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.