ADDED : மார் 07, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல் அடுத்த லட்சுமிபுரம், சத்தியமூர்த்தி தெரு சந்திப்பில், ஓராண்டுக்கு முன் அரைகுறையாக மழைநீர் வடிகால் பணி நிறுத்தப்பட்டது.
மாதவரம் மண்டல அதிகாரிகள், இன்றுவரை அதை முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கூர்மையான துருப்பிடித்த கம்பிகள் பாதசாரிகளின் உயிர் பறிக்கும் நிலையில் உள்ளது.
மேலும், அதையொட்டிய சிமென்ட் சாலையும் சேதமடைந்துள்ளது. இரவில், அந்த இடத்தை கடந்து செல்லும் முதியோர், குழந்தைகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
- சண்முகம், 51, லட்சுமிபுரம்.

