/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
/
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
ADDED : டிச 23, 2025 05:16 AM

கூடுவாஞ்சேரி: தங்கள் மகனின் பிறந்த நாள் பரிசாக, அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை தம்பதி வழங்கினர்.
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 190 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இரண்டாம் வகுப்பு பயிலும் 30 மாணவ - மாணவியருக்கு இருக்கை வசதி இல்லை. இதனால், தரையில் அமர்ந்து படித்து வந்தனர்.
இது குறித்து அறிந்த, தாம்பரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் அருண் - சரண்யா தம்பதி, தங்கள் மகன் அக் ஷய், 4, பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி, மேசை பொருட்களை, நேற்று அன்பளிப்பாக வழங்கினர்.