/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி விபத்து குன்றத்துாரில் நெரிசல்
/
கன்டெய்னர் லாரி விபத்து குன்றத்துாரில் நெரிசல்
ADDED : அக் 15, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், 'அசோக் லைலாண்ட் எலக்டரிக்கல்' கன்டெய்னர் லாரி, 30 டன் எடையை ஏற்றிக்கொண்டு, நேற்று இரவு சோதனை ஓட்டத்திற்கு சென்றது.
லாரியை ஓட்டுனர் நேதாஜி, 40, ஓட்டிச்சென்றார். குன்றத்துார் அருகே கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளாகியது. லாரியின் முன்பகுதி மட்டும், சாலையில் கழிந்தது. ஓட்டுனர், லேசான காயங்களுடன் தப்பினார். கன்டெய்னர் 30 டன் எடை இருந்ததால், நீண்ட நேரம் போராடி, 'கிரேன்' இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டது.
இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுந்து நின்றன. வெளிவட்ட சாலையில், குன்றத்துாரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

