/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம், திரு.வி.க., நகரில் துாய்மை பணி தீவிரமாகும்
/
ராயபுரம், திரு.வி.க., நகரில் துாய்மை பணி தீவிரமாகும்
ராயபுரம், திரு.வி.க., நகரில் துாய்மை பணி தீவிரமாகும்
ராயபுரம், திரு.வி.க., நகரில் துாய்மை பணி தீவிரமாகும்
ADDED : ஆக 12, 2025 01:00 AM
சென்னை, துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் நிலையில், 'ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தீவிர துாய்மை பணி நடைபெறும்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை முன், துாய்மை பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம், 11 நாட்களாக நடந்து வருகிறது.
இவர்களுக்கு, அ.தி.மு.க., - காங்கிரஸ் - த.வெ.க., - நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அக்கட்சி நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் வாயிலாக, துாய்மை பணி நடந்து வருகிறது.
இந்த மண்டலங்களில் ஜூலை, 16 முதல் நேற்று முன்தினம் வரை, 23,961 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மண்டலங்களில் உள்ள திடக்கழிவுகளை அகற்றுவதற்காக தீவிர துாய்மை பணி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாக்குறுதி அளித்தபடி அரசு செயல்படணும் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க துாய்மை பணியாளர்கள் நடத்தி வரும் அறவழி போராட்டத்தை, த.வெ.க., முழுமையாக ஆதரிக்கிறது. நான் சென்று சந்தித்தால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கருதிய துாய்மை பணியாளர்கள், த.வெ.க., அலுவலகத்திற்கே வந்து என்னை சந்தித்தனர். துாய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பில் தான் மாநகரம் சுத்தமாகிறது. தொற்றுநோய் தடுக்கப் படுகிறது. கொடுத்த வாக்குறுதிப்படி, துாய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதே அரசின் கடமை. எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, நடுத்தெருவில் போராடும் நிலைக்கு துாய்மை பணியாளர்களை தி.மு.க., அரசு தள்ளி விட்டுள்ளது. - விஜய், த.வெ.க., தலைவர்.