ADDED : செப் 18, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், எச்.சி.எல்., நிறுவனம் மற்றும் மீனவர்கள் ஒருங்கிணைந்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று துாய்மை பணி நேற்று நடந்தது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய தலைவர் சவுமியா தலைமையில் நடந்த இந்த துாய்மை பணியை, தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு துவக்கி வைத்தார். இதில் மீனவ பெண்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
கடலில் அதிகளவில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்வளம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்த 100க்கும் மேற்பட்டோர் பாதைகளை ஏந்தி, காசிமேடு துறைமுகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.