/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
/
சென்னை மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
சென்னை மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
சென்னை மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
ADDED : நவ 27, 2025 02:42 AM

சென்னை: தேசிய நீச்சல் போட்டிக்கு, சென்னை எஸ்.டி.ஏ.டி., மாணவ - மாணவியர் ஐந்து பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் டில்லி கல்வித்துறை சார்பில், 69வது எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, டில்லியில் வரும் 30ம் தேதி துவங்க உள்ளது.
நாட்டின் 30 மாநில அணிகளில் இருந்து 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில், மாண வ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க உள்ள தமிழக அணியில், சென்னை எஸ்.டி.ஏ.டி.,யின் நான்கு வீராங்கனையர் உட்பட ஐந்து பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்கள், தனுஸ்ரீ, 18 ; தனுஷிகா, 18; யாழினி, 18; ஜோசிகா, 17 மற்றும் ஹரிஸ் ஜெகன், 13.
தனுஷிகா, தனுஸ்ரீ, ேஜாசிகா, யாழினி, ஹரிஸ் ஜெகன்.