/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூ.1.85 கோடியில் கட்டடம் தயார்
/
பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூ.1.85 கோடியில் கட்டடம் தயார்
பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூ.1.85 கோடியில் கட்டடம் தயார்
பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூ.1.85 கோடியில் கட்டடம் தயார்
ADDED : ஏப் 17, 2025 11:42 PM

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் இருந்த பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளை பிரித்து, 2020ம் ஆண்டு டிச., 17ம் தேதி, பெரும்பாக்கம் என்ற காவல் நிலையம் துவக்கப்பட்டது.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உள்ள ஆறு வீடுகளை ஒருங்கிணைத்து, அதில் தற்போது காவல் நிலையம் செயல்படுகிறது.
சொந்த கட்டடம் கட்ட தேவையான, 32 சென்ட் இடத்தை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒதுக்கியது.
இதில் கட்டடம் கட்ட, 1.85 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. மொத்தம் 2,360 சதுர அடி பரப்பில், இரண்டடுக்கு கட்டடம் கொண்ட காவல் நிலையம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.
வெள்ளம் தேங்கும் பகுதியானதால், தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தும் இடமாக விடப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் மகளிர் காவல் நிலையம் அமையும் வகையில், முதல் மற்றும் இரண்டாம் மாடி கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் காவல் நிலையத்தை திறக்கும் வகையில், காவலர் வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.