/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
20 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 08, 2025 02:22 AM
சென்னை: அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துாதரகம் உட்பட 20 நாடுகளின் துணை துாதரகங்களுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, ஜப்பான், சிங்கப்பூர், வங்கதேசம், அயர்லாந்து, மலேஷியா, ஸ்வீடன் துணை துாதரகங்களுக்கும், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அமெரிக்க துாதரகம் உட்பட, 20 நாடுகளின் துணை துாதரகங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில், வெடிப்பொருட்கள் ஏதும் சிக்கவில்லை.
மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

