/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலவாக்கத்தில் 'நீலக்கொடி' திட்டம்
/
பாலவாக்கத்தில் 'நீலக்கொடி' திட்டம்
ADDED : டிச 24, 2025 05:14 AM
பாலவாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு 183க்கு உட்பட்ட பாலவாக்கத்தில், மாநகராட்சி சிறப்பு திட்டங்கள் துறை சார்பில், 6 கோடி ரூபாய் மதிப்பில், நீலக்கொடி கடற்கரை திட்டத்தை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் துவங்கி வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நீலக்கொடி கடற்கரை திட்டம், நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில், நிலத்தின் தன்மையை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்டு உள்ளது.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற்ற கோவளம் கடற்கரை போல், அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தும் நோக்கில், பாலவாக்கம் கடற்கரையில் திட்டப்பணி துவங்கப்பட்டுள்ளது.
இதில், சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில், மூங்கிலால் ஆன நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், கண்காணிப்பு கோபுரங்கள், முகப்பு வளைவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற சக்கர நாற்காலிகள், கழிப்பறை உட்பட, 18 வகையான வசதிகள் அமையவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல, 188வது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், கூடைப்பந்து, கபடி மைதானம் அமைக்கும் பணியையும், எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

