நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், செயலர் மா.கி.ரமணன் தலைமையில், பாரதியாரின் 143 வது பிறந்த நாள் விழா, சண்முகனார் பூங்காவில் நேற்று நடந்தது. பாரதியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி நடந்த கூட்டத்தில், 'தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், திருவொற்றியூரில் திருவள்ளுவர் கோவில் கட்டும் பணியை, திருவள்ளுவர் தினத்திலாவது துவக்க வேண்டும்.
தமிழ்தாத்தா உ.வே.சா., பிறந்தநாளை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவித்த அரசுக்கு நன்றி. பாரதியாரின் பிறந்த நாளை, கவிஞர் திருநாளாக அறிவித்துள்ள அரசு, அதை முறையாக செயல்படுத்த வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொருளாளர் நீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

