/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பம் வரவேற்பு
/
பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 16, 2025 12:10 AM
சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கான, இரண்டு ஆண்டு பி.எட்., முழுநேர படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, வித்யாசாகர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
சென்னையை மையமாக கொண்டு, 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வித்யாசாகர் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக இரண்டாண்டு சிறப்புக் கல்வி பி.எட்., முழு நேர படிப்பு உள்ளது.
இப்படிப்பை முடித்தவர்கள், சாதாரண பள்ளி அல்லது சிறப்பு பள்ளியில் பணிபுரியலாம்; சொந்தமாக மறுவாழ்வு மையம் துவங்கலாம்.
அரசு பணிகளுக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கலாம். உயர்கல்வி படித்து ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.
இப்படிப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இது, பி.எட்., பொதுக் கல்விக்கு இணையானதாக, இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரங்களை, 98400 35203 என்ற எண்ணில்அல்லது hrd@vidyasagar.co.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

