ADDED : மார் 07, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
வரும் 13 முதல் 15ம் தேதி வரை வகுப்புகள் நடக்கும். பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் போன்றவை குறித்து விளக்கப்படும். ஹைதராபாத் கராச்சி பி ஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், குக்கீகள், பாம்பே பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் எப்படி தயாரிப்பது என விளக்குவர்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2225 2081, 2225 2082, 86681 00181, 70101 43022 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

