/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் நகரும்படிகள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
ஆவடியில் நகரும்படிகள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : மே 01, 2025 12:51 AM

ஆவடி, :சென்னை புறநகர் ரயில் நிலையமான ஆவடி மார்க்கத்தில், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 285 மின்சார ரயில் ரயில்கள் மற்றும் ஐந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆவடி ரயில் நிலையத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில் 46 படிகளுடன் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக இருப்பதால், அதில் ஏறி இறங்க சிரமப்படும் முதியோர் உள்ளிட்ட பயணியர், ஆபத்தை உணராமல், தண்டவாளத்தை கடக்கின்றனர்.
இதனால், நகரும் படிகள் அமைக்கும் பணி, கடந்த ஏப்., மாதம் 1.50 கோடி ரூபாயில் துவங்கியது.
இந்நிலையில், முதல் மற்றும் நான்காவது நடைமேடையில் உள்ள நகரும்படிகள் பணி முடிந்து, நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

