/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜிவ் மருத்துவமனையில் தானியங்கி 'டோக்கன்'
/
ராஜிவ் மருத்துவமனையில் தானியங்கி 'டோக்கன்'
ADDED : மார் 02, 2024 12:12 AM
சென்னை, சென்னை, ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில் தினமும், 10,000 முதல் 15,000 பேர் வரை புறநோயாளிகளாக வருகின்றனர். இவர்கள், டோக்கன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
முதற்கட்டமாக பொது மருத்துவம், முடநீக்கியல், குருதி நோயியல், புற்றுநோய், கல்லீரல் நலன் உள்ளிட்ட 15 துறைகளில், வங்கிகளில் உள்ளதைப்போல், தானியங்கி டோக்கன் வழங்கும் கருவிகள் வைத்துள்ளோம்.
புறநோயாளிகள் பதிவு செய்யும் இடத்திலேயே அதற்கான டோக்கன்களைப் பெற்றுக் கொண்டு, உரிய வரிசை எண்ணில் டாக்டர்களை பார்க்கலாம். இந்த வசதி அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

