/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
ADDED : பிப் 08, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யும் முகாம், ஏழு மண்டலங்களில் நடக்க உள்ளன. முகாமில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், காலிப்பர், நவீன் செயற்கை கால் மற்றும் கை, காதொலி கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாம், 20ம் தேதி முதல், ஏழு மண்டலங்களில் காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கின்றன.
தென் சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்று உபகரணங்கள் பெற்று பயனடையலாம்.

