/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் பகிர்மான பெட்டிகளால் பீதி வேளச்சேரி கவுன்சிலர்கள் முறையீடு
/
மின் பகிர்மான பெட்டிகளால் பீதி வேளச்சேரி கவுன்சிலர்கள் முறையீடு
மின் பகிர்மான பெட்டிகளால் பீதி வேளச்சேரி கவுன்சிலர்கள் முறையீடு
மின் பகிர்மான பெட்டிகளால் பீதி வேளச்சேரி கவுன்சிலர்கள் முறையீடு
ADDED : அக் 09, 2024 12:21 AM

அடையாறு, அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், ஒன்பது கவுன்சிலர்கள், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி பகுதியில், மின்பகிர்மான பெட்டிகள் தாழ்வாகவும், திறந்தும் இருப்பதால், மழை வெள்ளத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின் கேபிள் பதிக்க தோண்டும் பள்ளத்தை முறையாக சீரமைப்பதில்லை.
வேளச்சேரி ஏரி அருகில், கடந்த மழையின்போது இடிந்து விழுந்த வீராங்கால் கால்வாய் தடுப்பு சுவரைக் கட்ட வேண்டும்.
கிண்டி, ஐ.ஐ.டி., வளாக மழைநீரை முறையாக கையாளாததால், தரமணி பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாநகராட்சி உயர் அதிகாரிகள், ஐ.ஐ.டி., வளாகத்தை ஆய்வு செய்து, போதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும்.
கிண்டியில் மழைநீர் வடியும் கட்டமைப்பை மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறை போதிய அக்கறை செலுத்துவதில்லை. மழையின்போது, இதர துறைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
அதற்கு ஏற்ப, இதர துறை அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் பேசி, கீழ்நிலை அதிகாரிகளை ஒத்துழைக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு, மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பதில் கூறினர். ஆனால், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் கூற, அத்துறை அதிகாரிகள் இல்லாததால், கவுன்சிலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மண்டலக்குழு தலைவர் துரைராஜ் கூறுகையில், ''மக்கள் பிரச்னைகள் குறித்து பேசும் அனைத்து கூட்டங்களுக்கும், இதர துறை அதிகாரிகள் பங்கேற்பதை, மண்டல அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கூட்டத்திற்கு வராத அதிகாரிகளிடம், உரிய விளக்கம் கேட்க வேண்டும்' என கூறினார்.
மாநகராட்சி பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா, குப்பை தொட்டி மேடை, தெரு விளக்கு அமைப்பது உட்பட 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

