/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்கன்வாடி, பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு
/
அங்கன்வாடி, பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : மார் 14, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம், வளசரவாக்கம் - ஆற்காடு சாலை, மண்டல அலுவலகம் அருகே, பாழடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.
அதை இடித்துவிட்டு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம், அதன் முதல் தளத்தில் உடற்பயிற்சிக் கூடம் கட்டடப்பட்டது.
அதேபோல், காரம்பாக்கம் 150வது வார்டில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறை கட்டடம், கழிப்பறை கட்டடம், வானகரம் ஊராட்சியில், 'பேவர் பிளாக்' சாலை, மழைநீர் வடிகால் என, 4.34 கோடி ரூபாய்க்கான பணிகளை, நேற்று முன்தினம் எம்.பி., - டி.ஆர்.பாலு மற்றும் எம்.எல்.ஏ., கணபதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

