/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யானைகவுனி மேம்பால பணி முடிக்க அறிவுரை
/
யானைகவுனி மேம்பால பணி முடிக்க அறிவுரை
ADDED : பிப் 09, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதி யானைகவுனி மேம்பாலம் மிகவும் பழுதடைந்து இருந்ததால், கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து, 2016ல் மூடப்பட்டது.
இப்பாலத்தை இடித்து புதிய மேம்பாலத்தை, சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரயில்வே, 30.78 கோடி ரூபாயில் கட்டி வருகின்றன. இப்பணிகள் 80 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், யானைகவுனி மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது போன்றவற்றை கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

