/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரசிகர்களை கவர்ந்த 'சிறுகதை' நாடகம்
/
ரசிகர்களை கவர்ந்த 'சிறுகதை' நாடகம்
ADDED : டிச 19, 2025 05:29 AM

சென்னை: இந்திய நுண்கலைச் சங்கம் சார்பில், 93வது தென்னிந்திய இசை மாநாடு மற்றும் இசைத் திருவிழா, ஆழ்வார்பேட்டை எத்திராஜ் கல்யாண மண்டபத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 'கோமல் தியேட்டர்ஸ்' சார்பில், 'படைப்பாளிகளை கொண்டா டுவோம்' என்ற கருப்பொருளில் எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், ஆர்.சூடாமணி, கோமல் சுவாமிநாதன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நான்கு சிறுகதைக ள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
கதைகள் - பிம்பம்: தன்னை ஜான்சி ராணி, அன்னை தெரசாபோல் உணரும் எம்.பி.ஏ., பட்டதாரி மீனாட்சி.
அவருக்கு நேர் எதிரே கணவனின் அதட்டல், மிரட்டலுக்கு அடிபணியும் அம்மா. பெங்களூரு மாப்பிள் ளைக்காக, வங்கி வேலையை விடும் மீனாட்சி. மாப்பிள்ளையின் குடும்பத்தினருக்காக மூக்கு குத்த ஒப்புக்கொண்டு, இறுதியில் தன் அம்மாவின் நிலையில் தன்னை உணர்ந் து, தனக்காக வாழ முடிவு செய்யும் வீர மங்கையாக மாறுகிறார்.
மனித உறவுகள்: ஏழு ஆண்டுகளாக மகனை பிரிந்து வாழும் தம்பதி. இறுதியில் மகனின் வருகையையொட்டி, தடபுடலான விருந்திற்கு ஏற்பாடு செய்து, இரண்டு மணி நேரத்தில் மகன் அசோக் மீண்டும் அமெரிக்கா செல்வதால் மனமுடைந்து கதறும் பெற்றோர்.
இறுதியில் வேலைக்காரன் முருகனுடன், தங்களது வாழ்க்கையை கழிக்கும் மன நிலையோடு கதை நகர்கிறது.
தவிர மேலும் இரு கதைகளை நாடக வடிவத்திற்கு மாற்றி, தாரிணி கோமல் இயக்கினார். கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, தமிழ்செல்வன், கிருத்திகா சுர்ஜித், அனுராதா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

