/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வயதானவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் நுாதன மோசடி
/
வயதானவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் நுாதன மோசடி
ADDED : பிப் 28, 2024 12:49 AM
சூளைமேடு, சூளைமேடு, நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் சர்மா, 60. இவர், தனியார் காப்பீட்டு திட்டத்தில், மாதந்தோறும் பணம் செலுத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பாலிசி பணத்தை ஒரு வாரத்திற்குள் எடுத்துத் தருவதாக கூறி, அதற்கு 2 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டு, காப்பீட்டு நிறுவன ஊழியர் போல் பேசியுள்ளார். இதை உண்மையென நம்பிய சர்மா, அந்த நபர் கேட்ட தொகை 2 லட்சம் ரூபாயை, அவரது வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளார்.
மறுநாள் காலை அவரை தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த சர்மா, நுங்கம்பாக்கம் அருகிலுள்ள சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது, அங்கிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சர்மா, சூளைமேடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதைபோல், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ,70, என்பவர், நேற்று முன்தினம், கிரெடிட் கார்டு வாயிலாக, உலர் பழங்கள் 'ஆர்டர்' செய்த போது, அவரது கார்டில் பணம் இல்லை என தெரிந்தது.
இவரது கிரெடிட் கார்டில் இருந்து மர்ம நபர், 10,000 வீதம் ஆறு முறையாக, 60,000 ரூபாயை திருடியிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

