/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேறும் சகதியுமாக மாறிய விளையாட்டு திடல்
/
சேறும் சகதியுமாக மாறிய விளையாட்டு திடல்
ADDED : நவ 05, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில், மாநகராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு திடலை தினமும், நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழையில், மாநகராட்சி விளையாட்டு திடலில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால், இளைஞர்கள் விளையாட்டு திடலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, விளையாட்டு திடலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.தேவி, தி.நகர்.

