ADDED : பிப் 07, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார் பெருங்களத்துாரில், ஊர்ப்புற நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, 6,800 புத்தகங்கள் உள்ளன. தினம் 50க்கும் மேற்பட்டோர் வந்து, நாளிதழ்கள், புத்தகங்களை படித்து செல்கின்றனர்.
நுாலகம் இயங்கும் கட்டடம், மாநகராட்சிக்கு சொந்தமானது. இந்த கட்டடத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், பொதுமக்களும், நுாலகத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண் ஊழியரும், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக, பலமுறை மனு கொடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இப்பிரச்னையில், மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, நுாலகத்தில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

